100 தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்தவருக்கு 50 இலட்சம் ரூபா அபராதம்

292 0

சட்டவிரோதமான முறையில் தங்க 10 கிலோ கிராம் நிறையுடைய 100 தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்கு கடத்தி வந்த போலாந்து நாட்டுப பிரஜைக்கு 50 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 65 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்த 60 வயதுடைய போலாந்து நாட்டுப பிரஜை ஒருவர் நேற்று விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவரிடம் கைப்பற்றப்பட்ட 100 தங்க பிஸ்கட்டுகளும் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு 50 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார்.

குறித்த சந்தேகநபர் கடந்த சில மாதங்களில் 06 தடவைகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளதாக சுங்க அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது.

Leave a comment