யாழ்ப்பாணத்தில் மரத்தடியில் மாணவியின் சீருடை மீட்பு!

460 0

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவியொருவரின் சீருடை உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்.புல்லுக்குளத்துக்கு அருகாமையில் காணப்படும் மரத்தடியிலிருந்து இன்று நண்பகல் இவை மீட்கப்பட்டுள்ளன.

பாடசாலை சீருடை, பாதணி மற்றும் கழுத்துப் பட்டி என்பன மீட்கப்பட்டுள்ளதோடு, யாழ். பொலிஸ் நிலைய தடயவியல் பொலிஸார் சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.

எனினும், சம்பந்தப்பட்ட மாணவி தொடர்பாக எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்படவில்லையென பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில், மாணவி தொடர்பான தகவல்களை கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a comment