மாலியில் பணியாற்ற ஐநா பாதுகாப்புப் படையிற்கு சிறீலங்காப் படையினரை அனுப்ப முடிவு!

451 0

slaf-unpkf-2ஐநா படையில் சிறீலங்காப் படையினரின் பங்களிப்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சிறீலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஆபிரக்க நாடான மாலியில் பாதுகாப்புக்காக சிறீலங்காப் படையினர் அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

அண்மையில் இலண்டனில் நடைபெற்ற ஐநா படையணியில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பாதுகாப்புக் கூட்டம் நடைபெற்றது. இதன்போதே மாலிக்கு சிறீலங்காப் படையினரை அனுப்புவது குறித்துத் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், மாலியில் பணியாற்றவுள்ள சிறீலங்காப் படையினருக்கு நவீன கருவிகளைக் கொள்வனவு செய்வதற்கு சிறீலங்கா இராஜாங்க அமைச்சர் கோரியதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கு ஐநா பாதுகாப்புக் குழுவும் சாதகமான பதிலளித்துள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

சிறிலங்கா படையினர் தமது திறமைகளை வெளிப்படுத்திக்கொள்வதற்கு இது பொன்னான வாய்ப்பாக அமையும் என்றும் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.