அலவ்வ, நவதல்வத்த பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் அந்த வீட்டில் இருந்த குறித்த நபர் மண்ணில் புதைந்துள்ள நிலையில் மீட்கப்பட்டு படுகாயங்களுடன் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளார்.
40 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை இரத்தினபுரி, கலகமதெனிய பிரதேசத்தில் வௌ்ளத்தில் படகு ஒன்றில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.
தொடம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

