இந்தோனேசியாவில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை கடுமையாக்க பாராளுமன்றம் ஒப்புதல்

193 0

இந்தோனேசியாவில் பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், பயங்கரவாதிகளுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தோனேசியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. சமீபத்தில் அந்நாட்டின் பிரசித்தி பெற்ற 3 தேவாலயங்களில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை கடுமையாக்க அந்நாட்டு அரசு முன்வந்துள்ளது. இந்த புதிய சட்ட வரைவில், பயங்கரவாத அமைப்புகளில் இணைவோர், அமைப்பிற்காக ஆட்களை சேகரிப்போர் ஆகியோர் மீது காவல்துறையே நேரடியாக வழக்குப்பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த புதிய சட்டவரைவுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தின் மூலம் பயங்கரவாத இயக்கங்களை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

Leave a comment