தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 உறுப்பினர்களை பழிவாங்கும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. எனவே இவ்வாறான பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு விரைவில் பதிலடி கொடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் மீது அரசியல் பழிவாங்கல்கள் முயற்சிகளை தற்போது அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
டி.பி. ஏகநாயக்க பதவியில் இருக்கும் போது பௌத்த மத வழிபாட்டு தேவைக்காக அரச வாகனங்களை, குறித்த விகாரைக்கு வழங்கியுள்ளதாக குறிப்பிட்டு குற்றவாளியாக பாவித்து விசாரணைக்குட்படுத்த அழைக்கப்பட்டுள்ளார்.
எனவே அரசாங்கத்தின் இவ்வாறான பழிவாங்களுக்கு தகுந்த பதிலடியினை விரைவில் கொடுப்போம் என்றார்.

