சனத் நிஷாந்த தொடர்ந்தும் விளக்கமறியலில்

320 0

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் அவரது சகோதாரர் ஜகத் சமந்த பெரேரா ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

2007ம் ஆண்டு ஆராச்சிகட்டுவ பிரதேச யெலாளர் மீது தாக்குதல் நடத்தியமைக்காக கைது செய்யப்பட்ட அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்ததுடன் பிணை நிபந்தனையை மீறியமைக்காக அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த இருவரையும் எதிர்வரும் ஜுன் மாதம் 7ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a comment