லண்டன் தமிழ் இளைஞர் கொலை- உண்மையில் என்ன நடந்தது ?

13342 0

ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 3.30 மணிக்கு மிச்சம் பகுதியில் நடந்த கத்திக் குத்தில் அருனேஸ் என்னும் 28 வயது இளைஞர் ஸ்தலத்திலேயே இறந்துள்ளார். கொல்லப்பட்ட அருனேசுக்கும் கொலையாளிக்கும் எந்த ஒரு முன் விரோதமும் இல்லை என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக மிச்சம் பொலிசார் சற்று முன்னர் வன்னி மீடியா இணையத்திற்கு தெரிவித்துள்ளார்கள்.

44 வயதுடைய மற்றும் 3 வியாபார நிலையங்களை வைத்துள்ள செல்வந்தரே தற்போது கைதாகியுள்ளார். இவர் சம்பவம் நடந்த இடத்தில் கத்தியோடு இருந்ததாக கூறப்படுகிறது.

கொல்லப்பட்ட அருனேசின் நண்பர் ஒருவருக்கும். வியாபார நிலையங்கள் வைத்திருக்கும் 44 வயதான நபருக்குமே முன் விரோதம் இருந்துள்ளது. சம்பவ தினத்தன்று மூவருமே மதுபோதையில் இருந்துள்ளார்கள். கொலையாளி என்று கருதப்படும் நபர் போன் போட்டு தனது முன் விரோதியை குறித்த இடத்திற்கு வரச் சொல்லியுள்ளார். அவருடன் சேர்ந்தே அருனேசும் சென்றுள்ளார். இந்தவேளை எதேட்சையாக இந்த கத்திக் குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

தனது நண்பரை கத்தியால் அவர் குத்தப் போகிறார் என்று தெரிந்த அருனேஸ், குறுக்கே பாய்ந்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் துல்லியமான உண்மை தெரியவில்லை. அருனேஸ் தாக்கப்பட்ட பின்னர் 44 வயதுடைய அந்த வியாபாரி ஐயோ என்று கத்திய வண்ணம் ஓடியதாகவும். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தவேளை அவர் இறந்து விட்டதாகவும் அறியப்படுகிறது. சத்தத்தை கேட்டு அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் சொல்லியே பொலிசார் அந்த இடத்திற்கு விரைந்து வந்துள்ளார்கள். மிச்சம் பொலிசார் இக் கொலை தொர்பாக தமிழர்களிடம் இருந்து மேலதிக தகவலை எதிர்பார்கிறார்கள்.

Leave a comment