வவுனியாவில் பாரம்பரிய உற்பத்தி விற்பனை நிலையம் திறப்பு

4640 0

வவுனியாவில் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையம் கடந்த சனிக்கிழமை உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜியதாச ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய உற்பத்திகள் பொருள் விற்பனை நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் விதான பத்திரன தலைமையில் நடைபெற்றது.

விருந்தினர்கள் மாலை அணிவித்து, கலாசார நடன நிகழ்வுகளுடன் அழைத்து வரப்பட்டதுடன் தேசியக் கொடியேற்றல் வைபவத்துடன் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், அரச வேலை வாய்ப்புக்களில் வன்னி மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Leave a comment