வடகொரியாவில் நிர்முலமாக்கப்படும் அணு ஆயுத பரிசோதனை கூடங்களை நேரில் பார்வையிட சர்வதேச பத்திரிகையாளர்கள் குழு அங்கு சென்றுள்ளது.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். அதற்கு முன்னதாக வடகொரியா தன்வசம் வைத்துள்ள அணு ஆயுதங்களை தங்களிடம் தந்தால் வாங்கிகொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

பருவநிலை மற்றும் காற்றின் போக்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நாளை அல்லது 25-ம் தேதிகளில் இந்த மூடுவிழா நடக்கலாம் என கூறப்பட்டது. மேலும், அப்பகுதியில் உள்ள அணு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையங்கள், சோதனை மற்றும் பாதுகாப்பு சாவடிகளும் அகற்றப்படும் என தெரியவந்துள்ளது. அதனை பார்வையிட்டு உறுதி செய்ய வெளிநாட்டு ஊடகங்களுக்கு வடகொரியா அழைப்பு விடுத்தது.
இந்நிலையில், ரியூட்டர்ஸ், சிஎன்என், சிபிஎஸ், ரஷியா டுடே மற்றும் சீன ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் வட கொரியாவிற்கு இன்று சென்றுள்ளனர்.

