ஜனாதிபதிக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

324 0

xxsarath-n-silva-300-news-720x480லஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் திலக்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, நேர்மையான சேவையை செய்ய வேண்டுமாயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான லஞ்ச குற்றச்சாட்டு குறித்து சுயாதீன விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

இதற்கு தேவையான அனைத்து அதிகாரங்களும் 19 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது பிரதிநிதி ஒருவர் லஞ்சம் கோரியதாக அவுஸ்திரேலிய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

எனினும் இது குறித்து ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பிய போது அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது, குற்றச்சாட்டுக்கு பதிலளிக்குமாறு சட்டமா அதிபருக்கு பணித்துள்ளதாக கூறியுள்ளார்.

நாட்டில் உண்மையான நல்லாட்சி நடக்குமாயின் லஞ்சம் கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜனாதிபதியினால், சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியை நாட முடியாது.

லஞ்ச ஆணைக்குழுவும் சட்டமா அதிபர் திணைக்களமும் செய்ய வேண்டியது, ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதாகும் எனவும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார்.