தங்குவதற்கு வீடில்லை, ஆனால் வங்கியில் 170 கோடி பணம்!

267 0

சாலையில் வசித்து வந்த ஃபாத்திமா ஒத்மன் எனும் பெண்ணுக்கு உதவிய மனிதாபிமானம் கொண்ட மக்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து தான் போயிருப்பார்கள். ஃபாத்திமா ஓரிரு நாட்களுக்கு முன் இறந்துவிட்டார். இதில் ஆச்சரியம் என்னவெனில் அவரது வங்கி கணக்கில் ஏறத்தாழ 170 கோடி லெபனான் பணம் இருந்தது. இதன் இந்திய மதிப்பு ஏழரை கோடி என்று அறியப்படுகிறது.

லெபனானின் தலைநகரான பெய்ரூட் சாலைகளில் வாழ்ந்து வந்தவர் தான் ஃபாத்திமா. இவர் தனது 52வது வயதில் ஓரிரு நாட்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். இவர் லெபனான் உள்நாட்டு போரின் போது தனது கை மற்றும் கால்கள் செயலிழந்து போனவர் ஆவார். வீடின்றி சாலையில் வசித்து வந்த ஃபாத்திமாவுக்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் தான் உதவி வந்துள்ளனர். இவருக்கு பணமும், உணவும் அளித்து பலரும் உதவியுள்ளனர். போலீஸ் திகைப்பு! ஃபாத்திமா இறந்த பிறகு, அவரது உடைமைகளை சோதித்து பார்த்த போது அவரது பையில் மட்டுமே ஐந்து மில்லியன் லெபனான் பணம் இருந்தது அறியப்பட்டது. இதன் இந்திய மதிப்பு 2.25 இலட்சம் ஆகும். இந்த பணத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி பத்திரமாக வைத்திருக்கிறார் ஃபாத்திமா. மேலும், ஃபாத்திமாவின் பையை துழாவிக் கொண்டிருக்கையில் அதிலிருந்து வங்கி புத்தகம் ஒன்று சிக்கியுள்ளது. அதை வைத்து ஆராய்ந்த போதுதான். ஃபாத்திமாவின் பெயரில் வங்கியில் 170 கோடி லெபனான் பணம் சேமிப்பில் இருந்தது அறியவந்துள்ளது.

 

இதன் இந்திய மதிப்பு ஏழரை கோடிக்கும் மேலாகும். மக்கள் அதிர்ச்சி! பல ஆண்டுகளாக ஃபாத்திமாவுக்கு பணவுதவி செய்து வந்த பெய்ரூட் நகர மக்கள் இதை செய்தி மூலம் அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு தனிப்பட்ட நபரிடம் இத்தனை பெரும் தொகை இருப்பது லெபனான் பொறுத்தவரை பெரும் செல்வந்தருக்கான மதுப்புக்கு ஈடானது ஆகும்.

 

இத்தனை பணம் இருந்தும் ஃபாத்திமா தொடர்ந்து பல காலமாக பிச்சை எடுத்துக் கொண்டிருந்தது அப்பகுதியை சேர்ந்த மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபாத்திமாவின் குடும்பம்! மேலும் ஃபாத்திமாவை பற்றி ஆராய்ந்த போது, இவரது குடும்பம் சிரியா எல்லையில் வசித்து வருவதை காவலர்கள் அறிந்தனர். இவரது இறுதி சடங்குகள் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஃபாத்திமாவிடம் இத்தனை பெரும் தொகை இருந்ததை அறிந்த அவரது குடும்பத்தாரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

1975 -1990க்கு இடைப்பட்ட காலத்தில் லெபனானில் நடந்த உள்நாட்டு போரின் போது ஃபாத்திமா காயமடைந்து கை, மற்றும் கால்கள் சிறு பகுதி இழந்தும், செயலிழந்த நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த போரின் போது ஏறத்தாழ 1,20,000 பேர் உயிரிழந்தனர். இலட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து சென்றனர். இந்த போரின் போது கிறிஸ்துவ, சன்னி முஸ்லின், சியா முஸ்லிம் மற்றும் இடதுசாரி பிரிவினருக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இந்த போரினால் இஸ்ரேல், சிரியா , பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிலும் தாக்கங்கள் உண்டாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment