6000 பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை-மனோ கணேசன்

1413 0

ஆறாயிரம் தமிழ் பாடசாலைகளில் தமிழ் மொழி ஆசிரியர்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நல்லிண்க்கத்திற்கான பயணத்தின் போது இவ்வாறான விடயங்கள் குறித்து மிகவும் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் இந்த குறையை போக்க சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய மொழி கற்கை மற்றும் பயிற்சி நிறுவனத்தை மொழிப் பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் இதன் மூலம் மொழிக்கல்வி தொடர்பில் சரியான தரத்தை ஏற்படுத்த முடியும் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment