தமிழக அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கேரள வனத்துறையினருக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

376 0

201609120414570274_kerala-forest-department-officials-were-stopped-by-the-state_secvpfதமிழக அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கேரள வனத்துறையினருக்கு ஜி.கே.வாசன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

தமிழக, கேரள எல்லையில் கேரளப் பகுதியில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணையினை பராமரிப்பதும், பாதுகாப்பதும், நீர் மேலாண்மை குறித்தும் தமிழக அரசு பணியினை மேற்கொண்டு வருகிறது.

எனவே அணையில் ஏதேனும் பராமரிப்பு பணிகள் நடைபெற்றால் அதனை பார்வையிட தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் செல்வது வழக்கமான ஒன்று.

இந்த நிலையில் பரம்பிக்குளம் அணையின் பராமரிப்பு பணிகளை மேற்பார்வையிடுவதற்காக சென்ற தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

ஏற்கனவே இதேபோல் கேரள வனத்துறையினர் தமிழக அதிகாரிகளை அணையின் பராமரிப்பு பணிகளை பார்வையிடவிடாமல் பலமுறை தடுத்து நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

கேரள வனத்துறையினரின் இச்செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது.

எனவே பரம்பிக்குளம் ஆழியாறு நீர்ப்பாசனத் திட்டத்தின்படி அணைகளை பார்வையிடும், பாதுகாக்கும், பராமரிக்கும் தமிழக அரசின் உரிமைகளை நிலைநாட்ட தமிழக அரசு கேரள அரசோடு உடனடியாக பேசி நல்ல தீர்வு காண வேண்டும்.

மேலும் மத்திய அரசு இந்தப் பிரச்சினை சம்பந்தமாக கேரள அரசை கண்டிப்பதோடு, ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு உரிய நியாயத்தைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.