முல்லைத்தீவில் வர்த்தகர்கள் கடைகளை பூட்டி, நினைவேந்தல் நிகழ்விற்கு தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளனர்(காணொளி)

9 0

முல்லைத்தீவில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு, இன்றையநாள் துக்கதினமாக அனுஸ்டிக்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு, முல்லைத்தீவில் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு, மக்கள் இன்றைய நாளை துக்கதினமாக அனுஸ்டித்து வருகின்றனர்.

2009ஆம் ஆண்டு மே மாதம் 18 திகதி யுத்தம் முடிவுக்கு வந்த நாளில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இதனையடுத்து இன்றைய தினம் நண்பகல் 12 மணிவரை வர்த்தகர்கள் கடைகளை அடைத்து துக்கதினமாக அனுஸ்ரிக்குமாறு கோரப்பட்டதற்கமைவாக, இன்று முல்லைத்தீவு மாவட்டமெங்கும் வர்த்தக நிலையங்களை பூட்டி இன்றைய நாளை துக்கதினமாக அனுஸ்ரித்து வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, தண்ணீரூற்று, ஒட்டுசுட்டான,; மாங்குளம், மல்லாவி உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் வர்த்தகர்கள் கடைகளை பூட்டி, நினைவேந்தல் நிகழ்விற்கு தமது பூரண ஆதரவை வழங்கி, இன்றைய நாளை துக்கதினமாக அனுஸ்ரித்து வருகின்றனர்.

Related Post

அரசாங்கத்தின் கைக்கூலிகளை தமிழ்த் தலைமைகளாக்க முடியாமல் போய்விடும் என்பதனாலேயே மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டார்! – செ.கஜேந்திரன்

Posted by - January 5, 2018 0
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதரீதியாக பலம்பெற்றிருந்த சூழலில் சமாதான உடன்படிக்கை ஏற்படப்போகிறது என்ற நிலையில் குமார் பொன்னம்பலம்

கிளி, முல்லையில் 2 ½ வருடங்களில் 5,442 ஆயுதங்கள், குண்டுகள் மீட்பு

Posted by - July 19, 2018 0
கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் அண்டின் இதுவரையான காலப்பகுதியில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில், யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளினால் புதைத்து…

யாழ் மாவட்டத்தில் அனைத்து சபைகளுக்கும் கட்டுப்பணம் செலுத்தியது தமிழ்க் காங்கிரஸ் !

Posted by - December 8, 2017 0
யாழ் மாவட்டத்தில் உள்ள 16 உள்ளூராட்சி மற்றும் நகரசபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இன்று (08) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

ஜப்பானுக்குச் செல்லும் யாழ் இந்து மாணவன்(படங்கள்)

Posted by - December 12, 2016 0
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவனொருவர் புலமைப் பரிசில் பெற்று ஜப்பான் நாட்டிற்குச் சென்றுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 12இல் உயிரியல் பிரிவில் கல்வி பயிலும் நிமலன்…

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியை!

Posted by - October 25, 2017 0
யாழ்ப்பாண மாவட்டம் அரியாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது.

Leave a comment

Your email address will not be published.