வவுனியா குருமண்காடு சித்தி விநாயகர் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி பிரார்த்தனை (காணொளி)

2187 51

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், வவுனியா குருமண்காடு சித்தி விநாயகர் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி பிரார்த்தனை இன்று காலை இடம்பெற்றது.
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ,வடக்கு கிழக்கு பிரதேசமேங்கும் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது.
இந்நிலையில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தினால் குருமண்காடு சித்தி விநாயகர் ஆலயத்தில் அஞ்சலி பிரார்த்தனை நடாத்தப்பட்டுள்ளது.
அந்தணர் ஒன்றியத்தின் செயலாளர் மயூரசர்மா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், முத்து ஜெயந்திநாதக்குருக்கள் ஆத்மசாந்தி பிரார்த்தனையை நடத்தியிருந்தார்.
தொடர்ந்து அஞ்சலிச் சுடர்கள் ஏற்றபட்டதை அடுத்து இறந்த ஆத்மாக்களுக்காக பொதுமக்கள், அந்தணர்கள், ஆலய நிர்வாகத்தினர் நெய் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

Leave a comment