வவுனியாவில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி (காணொளி)

14 0

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று காலை வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள கருமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.

தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி ஆலயத்தின் பிரதம குரு சிவசிறி பிரபாகர குருக்கள் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார்.

நிகழ்வில் சுட்டிகளில் நெய்விளக்கேற்றி உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன், வவுனியா நகரசபை உப நகரபிதா எஸ்.குமாரசாமி, தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், மாணிக்கம் ஜெகன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

Related Post

வட மாகாணத்தில் பணிபுறக்கணிப்பில் வைத்தியர்கள்

Posted by - May 14, 2018 0
வட மாகாணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்கள் இன்று ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் பல மாதங்களாக வழங்கப்படாத நிலையில் அதனை வழங்குமாறு…

தமிழ் மக்கள் பேரவை வடக்கு கிழக்கில் இளைஞரணி உருவாக்க தயாராகிறது!

Posted by - March 1, 2018 0
வட கிழக்கு மாகாணங்களில் இளைஞர் அணிகளை ஒன்று சேர்க்கவும் அவர்களுக்கு எமது தமிழ் மக்கள் பேரவையூடாக போதிய அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டியுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 78 வயது முதியவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

Posted by - November 28, 2017 0
ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முல்லைத்தீவைச் சேர்ந்த 78 வயது முதியவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தது வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

விபத்துக்களற்ற மாகாணமாக வடமாகாணத்தைக் கட்டியெழுப்புவோம் – அமைச்சர் டெனிஸ்வரன்

Posted by - July 22, 2017 0
வடமாகணத்தில் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்துதல் சம்மந்தமான முக்கியகூட்டம் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் 18.07.2017 செவ்வாய்க்கிழமையன்று பிற்ப்பகல் 2 மணியளவில் நடைபெற்றது.…

பௌத்த மத சரத்துக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு

Posted by - October 10, 2016 0
அரசியல் அமைப்பில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சரத்துக்களை தொடர்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட்ட அனைத்து கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொலன்னாவ…

Leave a comment

Your email address will not be published.