முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (காணொளி)

3919 0

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.

இன்று முற்பகல் 11.00 மணிக்கு, இறுதி யத்தத்தில் உயிர்நீர்த்த உறவுகளுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, 2 நிமிட மௌன அஞ்சலியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாயின.

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பொதுச்சுடரினை ஏற்றி நினைவேந்தல் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

அதனை தொடர்ந்து இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைந்து அவர்களது உறவினர்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி, உறவுகளை நினைத்துக் கதறி அழுதனர்.

நினைவேந்தல் நிகழ்வில் வடக்கு கிழக்கில் இருந்து பல்லாயிரக்கணக்காண மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்குச் சென்றிருந்ததுடன், யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியும் முள்ளிவாய்க்காலைச் சென்றடைந்துள்ளது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Leave a comment