காத்தான்குடி பிரதேசத்திலுள்ள மர விற்பனை நிலையமொன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3.20 அளவில் ஏற்பட்ட இந்த தீயினை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இனைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
குறித்த தீயினால் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை எனவும் தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

