சர்வதேச வான்வெளியில் ரஷ்ய குண்டுவீச்சு – விமானங்களை இடைமறித்த அமெரிக்க போர் விமானங்கள்

240 0

அலாஸ்கா அருகே சர்வதேச வான்வெளியில் பறந்த ரஷ்ய போர் விமானங்களை அமெரிக்க போர் விமானங்கள் இடைமறித்து திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவின் மேற்கு கடற்கரையில் இருந்து சுமார் 200 மைல் தொலைவில் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலம் அமைந்துள்ளது. சர்வதேச வான்வெளியில் அமைந்துள்ள இப்பகுதியில் ரஷ்யாவுக்கு சொந்தமான இரண்டு டியூ-19 வகை போர் விமானங்கள் நேற்று பறந்து சென்றுள்ளன.

அவற்றை அமெரிக்காவின் நோராட் எப்-22 ரக போர் விமானங்கள் நடுவழியிலேயே இடைமறித்துள்ளது. அதைத்தொடர்ந்து வான் பாதுகாப்பு பகுதியை விட்டு  ரஷ்ய போர் விமானங்கள் திரும்பிச் சென்றுவிட்டதாக வட அமெரிக்க விமான பாதுகாப்பு செய்திதொடர்பாளர் மேஜர் ஆன்ரூவ் ஹென்னெசி தெரிவித்துள்ளார்.

இதேபோல் கடந்த ஆண்டு மே 3-ம்தேதி ரஷ்ய விமானத்தை அமெரிக்க போர் விமானம் வழிமறித்து திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Leave a comment