அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது

482 0

625.500.560.350.160.300.053.800.900.160.90வடக்கில் இடம்பெற்றுவரும் செயற்பாடுகள் தொடர்பாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் யோசனைகளையும் அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய சிவசக்தி ஆனந்தன் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஆட்சிமாற்றத்தின் பின்பும் தமது கோரிக்கையை அரசாங்கம் தொடர்ச்சியாகத் தட்டிக்கழித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். குறிப்பாக நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்தின் ஊடாக அரசியல் கைதிகளின் வழக்கானது தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு இதுவரை எத்தனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள் எனவும் அவையில்கே ள்வியெழுப்பியுள்ளார்?

Leave a comment