தமிழின அழிப்புக்கு நீதி கோரி யேர்மனியில் 2 வது நாளாக தொடரும் கவனயீர்ப்பு கண்காட்சி

752 0

தமிழின அழிப்புக்கு நீதிகோரி பன்னாட்டு சமூகத்தை கவனயீர்க்க பேர்லின் நகரத்தில் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு கண்காட்சி இன்றைய தினம் காலை ஹம்பூர்க் நகர மத்தியிலும் மாலை கண்ணோவர் நகர மத்தியில் முன்னெடுக்கப்பட்டது . “பேசப்படாத உண்மைகள் ” எனும் கண்காட்சி ஈழத்தமிழர்களின் வரலாற்று பதிவுகளையும் , ஈழத்தமிழர்களுக்கு 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற/ நடைபெறும் இனவழிப்பு விபரங்களையும் ஆதாரபூர்வமாக உள்ளடக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இக் கண்காட்சியை வேற்றின மக்கள் பார்வையிட்டத்தோடு தமது கரிசனையையும் ,அதே நேரத்தில் ஐநாவின் பாராமுகத்தை கண்டித்தும் கருத்துக்களை தெரிவித்தனர் . இக் கண்காட்சியில் குறிப்பிட்ட நகரத்தில் உள்ள தமிழ் மக்களும் கலந்துகொண்டு ஆங்கிலத்திலும் , யேர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தனர்.

நாளையை தினம் காலை 10 மணிமுதல் மதியம் 14 மணிவரை இக் கவனயீர்ப்பு கண்காட்சி Osnabrück தலைமை தொடரூந்து வெளி வளாகத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment