பனாமா அதிபர் ஜுவான் கார்லோஸ் வரேலா ரோட்ரிக்சுடன் வெங்கையா நாயுடு சந்திப்பு

257 0

பனாமா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அந்நாட்டு அதிபர் ஜுவான் கார்லோஸ் வரேலா ரோட்ரிக்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவுதமாலா, பனாமா மற்றும் பெரு நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதல் கட்டமாக டெல்லியில் இருந்த புறப்பட்ட அவர், ஸ்பெயின் வழியாக கவுதமாலா நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் கவுதமாலா ஜனாதிபதி ஜிம்மி மொரலெஸ், பாராளுமன்ற சபாநாயகர் அல்வரோ அர்சு எஸ்கோபார் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், தனது சுற்றுப்பயணத்தில் இரண்டாம் கட்டமாக பனாமா நாட்டுக்கு சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அந்நாட்டு அதிபர் ஜுவான் கார்லோஸ் வரேலா ரோட்ரிக்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருவரது முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 12-ம் தேதி இந்தியா திரும்புகிறார்.

Leave a comment