வவுனியா கூமாங்குளத்தில் பதற்றம்-மர்ம பொருளை தேடும் பொலிஸார்-ஊடகவியலாளர்கள் புறக்கணிப்பு!

336 0

வவுனியா கூமாங்குளம் நூலக வீதியிலுள்ள சின்னம்மன் கோவிலுக்கு முன்பாகவுள்ள காணியைச் சுற்றி சுற்றுமதில் அமைக்கப்பட்ட காணி ஒன்றில் பெருமளவு வெடி பொருட்கள் காணப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் நேற்று மாலை 5மணியளவில் வவுனியா நீதிமன்றத்தின் அனுமதியுடன் அப்பகுதியில் அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறு அகழ்வுப்பணிகளை மேற்கொள்வதற்கு பொலிசார், கடற்படையினர், கிராம சேவையாளர், எனப்பலரும் அங்கு சமூகமளித்துள்ள நிலையில் அகழ்வுப்பணி இடம்பெறும் பகுதிக்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்கவில்லை அத்துடன் பிரதேச சபை உறுப்பினர்களையும் அவ்விடத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. கடந்த காலங்களில் வவுனியாவில் பல பகுதிகளில் இவ்வாறு வெடி பொருட்களை தேடும் பணிகள் படையினரால் இடம்பெற்றிருந்தபோதிலும் அங்கு ஊடகவியலாளர்களை அனுமதித்திருந்தனர் எனினும் நேற்று இடம்பெறும் அகழ்வுப்பணிகள் மிகவும் இரகசியமான முறையில் மேற்கொள்வதற்கு காரணம் தெரியவரவில்லை.

Leave a comment