உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்த பின் உயிர்பிழைத்த சிறுவன்

205 0

அமெரிக்காவைச் சேர்ந்த சிறுவன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்த பின் கோமாவில் இருந்து நலமாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த ட்ரெண்டன் மக்ன்லி என்ற 13 சிறுவனுக்கு சமீபத்தில் நடந்த விபத்தில் தலையில் பயங்கரமாக அடிப்பட்டது. இதில் அவனுடைய மூளை அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அவனுக்கு 3 முறை தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அவனுக்கு உடல்நலம் சரியாக வில்லை.

கோமா நிலைக்கு சென்றான். இதனால் சிறுவனின் பெற்றோர் அவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

சிறுவனின் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்வதற்கு முந்தைய நாள் அவனுக்கு நினைவு திரும்பியது. தற்போது அவன் உடல்நலம் தேறிவருகிறான் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இறந்து விடுவான் என மருத்துவர்களால் கூறப்பட சிறுவன் உயிர்பிழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரெண்டன் மக்ன்லியின் தாய் அவனின் அறுவை சிகிச்சைக்காக முகநூல் மூலம் நன்கொடை கேட்டிருந்தார். அவருக்கு 48 நாட்களில் 6.8 லட்சம் நிதியுதவியாக கிடைத்தது. இந்நிலையில், சிறுவனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment