அரசியலமைப்பு மீதான 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை இம்மாதத்தின் மூன்றாவது வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம் இன்று (07) கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

