20ஆம் திகதி வரை­யில் இலங்கையில் காத்திருக்கும் ஆபத்து

243 0

தற்­போது வடக்கு உட்­பட நாடு முழு­வ­தும் நில­வும் அதிக வெப்­பத்­து­ட­னான கால­நிலை எதிர்­வ­ரும் 20ஆம் திகதி வரை நீடிக்­கும் என்று வளி­மண்­ட­லவியல் திணைக்­க­ளம் அறி­வித்­துள்­ளது. தற்­போது வெப்­ப­நிலை 35 பாகை செல்­சி­யஸ் வரை அதி­க­ரித்­துள்­ளது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சுட்­டெ­ரிக்­கும் வெயி­லால் மக்­கள் பெரும் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொள்­கின்­ற­னர். கால்­ந­டை­க­ளும் அவ­தி­யு­று­கின்­றன.

அதி­க­மான வெப்­ப­நி­லை­யைத் தாக்­குப்­பி­டிக்க நாளொன்­றுக்கு 2 லீற்­றர் நீர் அருந்த வேண்­டு­வது அவ­சி­யம் என்­றும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

சிறு பிள்­ளை­க­ளுக்கு ஒரு நாளைக்கு ஒன்­றரை லீற்­றர் நீர் வழங்­கு­வ­தும் பாது­காப்­பா­னது. இந்த நாள்­க­ளில் அடிக்­கடி குளிப்­ப­தும் நல்­லது என்­றும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

அதிக வெப்­ப­மான கால­நி­லை­யின் போது பய­ணங்­க­ளில் ஈடு­பட வேண்­டாம். கூடி­ய­ளவு குடை­களை பயன்­ப­டுத்த வேண்­டும். தொப்பி மற்­றும் வெள்ளை நிறத்­தி­லான ஆடை­களை பயன்­ப­டுத்த வேண்­டும்.

இந்த வெப்­பம் உட­லுக்கு ஏற்­ற­தல்ல என்­ப­த­னால் சிந்­தித்து செயற்­பட வேண்­டும் என்­றும் துறை­சார்ந்­த­வர்­கள் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர்.

Leave a comment