மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தின ஏற்பாடுகள் தொடர்பில் கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபையில் தற்போது கலந்துரையாடப் பட்டு வருகிறது.
முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறுகலந்துரையாடலில் மாகாண அவைத் தலைவர் சிவஞானம், அமைச்சர்களான சர்வேஸ்வரன், அனந்தி சசிதரன், சிவனேசன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த சில வருடங்களாக வடக்கு மாகாண சபையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. வழமைபோன்று இந்த முறையும் அது தொடர்பில் ஒழுங்குகளை மேற்கொள்ள இந்தக் கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் ஒருமித்து ஒரே இடத்தில் நினைவுகூர வேண்டும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

