துமிந்த இருக்கும் மேடையில் ஏறமாட்டேன்- சந்திம கொள்கையளவில் தீர்மானம்

336 0

சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய துமிந்த திஸாநாயக்க இருக்கும் மேடையில் தான் ஏறுவதில்லையென கொள்கை ரீதியில் தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தனது கட்சியின் மே தினக் கூட்டத்தின் மேடையில் ஏறுவதாக கூறியுள்ளார்.

தனது பிரதேச மக்களுடன் மே தினக் கூட்டத்துக்கு செல்வதாக கூறியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாபா அபேவர்தனவின் மகனின் திருமண நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதனால் மே தினக் கூட்ட மேடையில் ஏறுவதில்லையெனவும் அறிவித்துள்ளார்.

Leave a comment