ஹொரோயினுடன் இருவர் கைது

229 0

ஆடம்பர வாகனம் ஒன்றில் ஹொரோயினுடன் பயணித்த பெண் மற்றும் ஆணொருவர் பொலிஸ் போதைப்பொருள் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு ஆடம்பர வாகனத்தில் ஹெரோயினியைக் கடத்திய ஒரு பெண் மற்றும் ஒருவரை பொலிஸ் போதைப் பொருள் கடத்தல் கைது செய்தது.

ஹொரண, தல்கஹவில சந்தியில் பொலிஸ் போதைப்பொருள் பிரிவினர் நடத்திய சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

அவர்களிடம் இருந்து 100 கிராம் ஹொரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்களை ஹொரண நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவர்களை 7 நாள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு போதைப்பொருள் பிரிவினர் ​மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment