வவுனியாவில் பேரூந்தில் மோதி முச்சக்கரவண்டி விபத்து

329 0

வவுனியா வேப்பங்குளம் 8ம் ஒழுங்கைக்கு அருகே இன்று (05.05.2018) மதியம் 2.45 மணியளவில் பேரூந்தில் மோதி முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒமந்தை பொலிஸார் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்

வவுனியாவிலிருந்து பாவற்குளம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேரூந்தின் மீது வேப்பங்குளம் 8ம் ஒழுங்கைக்கு அருகே மன்னார் வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒமந்தை பொலிஸார் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்

விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியில் இருந்தவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் வேகமாக சென்ற சமயத்திலேயே பேரூந்தில் மோதி விபத்துக்குள்ளானதாக விபத்தினை நேரில் பார்வையிட்டவர்கள் தெரிவித்தனர்.பொதுமக்கள் மதுபோதையில் சென்றால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பொலிஸார். தங்களே விபத்துக்குகளுக்கு காரணமாகவிருந்தால் என்ன செய்வது? குறித்த பொலிஸார் ஒமந்தை பொலிஸ் நிலையத்தினை சார்ந்தவர் எனவும் பூவரசங்குளத்தில் வசித்து வருவதாகவும் பொதுமக்கள் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment