நாட்டின் சில பகுதிகளுக்கு நாளைய (06) தினம் அதிக வெப்பநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, வட மத்திய, கிழக்கு மாகாணங்களிலும், குருநாகல், கம்பஹா, மாத்தளை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் இந்த வெப்பநிலை நிலவும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த வெப்பநிலை உடலுக்குத் தீங்கானதாக அமையாத வகையில் பொது மக்கள் பாதுகாத்துக் கொள்ளுமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

