எதிர்பார்த்த அமைச்சு கிடைக்கவில்லை- பொன்சேகா கவலை

8823 33

அமைச்சரவை மறுசீரமைப்பின் போது சட்டம் ஒழுங்கு அமைச்சு பதவி தனக்கு வழங்கப்பட வேண்டும்  என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் பலர் குறிப்பிட்டனர். ஆனால் தற்போது எவரும் எதிர்பார்க்காத நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கடந்த காலங்களிலும் சரி தற்போதைய தேசிய அரசாங்கத்திலும் கைவிடப்பட்ட ஒரு துறையாகவே வனஜீவராசிகள் பாதுகாப்பு துறை காணப்படுகின்றது.

தேசிய அரசாங்கத்தின் குறுகிய காலக்கட்டத்திற்குள் வனவிலங்குகளின் பாதுகாப்பு தொடர்பில் பல முன்னேற்றகரமான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு  சிறந்த துறையாக செயற்படுத்துவேன் என உறுதியளித்தார்.

நிலையான அபிவிருத்தி ,வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் பிரதேச அபிவிருததி அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a comment