வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் ; தமிழ் மக்களின் கோரிக்கை

270 0

பெரும்பான்மையான தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என வெகுவிரைவில் கோருவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என சில தமிழ் மக்கள் கோர ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உதயன் நாளிதழின் ஏற்பாட்டில் ஈழத்தின் மிகப் பெரும் ஊடகப் படுகொலை நடந்த மே 2 ஆம் திகதியான இன்று ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி சர்வதேச ஊடக சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ் பத்திரிகைகள் தாம் செல்லும் பாதையில் இருந்து 180 பாகை திரும்பி நடக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்,

அவ்வாறு நடந்தால் தான் நீங்கள் சுதந்திரமாக நடக்க முடியும் என்றும் பொய் சொல்வது பத்திரிக்கை சுதந்திரமல்ல என்றும் பொய் என தெரிந்தும் பொய்யினை கூறுவது சுதந்திரமில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தான் ஒருபோதும் இந்த அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என சொல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனால் மக்கள் மத்தியில் ஒரு பிரமை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவரசமாக எதிரி மாற்றம் தேவை என்றே நாங்கள் மேடை மேடையாக கூறியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளா

Leave a comment