யாழ்ப்பாணத்தில் 2,691 பேர் பட்டதாரிகள் நியமனத்திற்கு தகுதி

214 0

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேர்முகத் தேர்விற்காக அழைக்கப்பட்ட பட்டதாரிகளில் 668 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை என மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் என ஜனாதிபதி செயலகம் மற்றும் மாவட்டச் செயலகங்களில் பதிவு செய்த மொத்தம் 4 ஆயிரத்து 326 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்காக மாவட்டச் செயலகத்தினால் அழைக்கப்பட்டனர்.

இவ்வாறு அழைக்கப்பட்ட 4 ஆயிரத்து 326 பட்டதாரிகளுக்கும் கடந்ந 18 ஆம் திகதி முதல் 26 ம் திகதிவரையில் நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றன.

இந்த நேர்முகத் தேர்வுகளில் 3 ஆயிரத்து 658 பட்டதாரிகள் தோற்றியிருந்தனர்.

இவ்வாறு நேர்முகத் தேர்விற்குத் தோற்றிய 3 ஆயிரத்து 658 பட்டதாரிகளில் 821 பட்டதாரிகள் 2017 ஆம் ஆண்டிற்கான பட்டதாரிகளாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலரிற்கு ஆவண ரீதியில் சான்றுகள் அற்ற தன்மையும் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அரசினால் கோரப்பட்ட காலத்திற்குட்பட்ட 2016-12-30ற்கு முன்பு பட்டம் பெற்ற பட்டதாரி நியமனத்திற்கு தகுதியுடையவர்களாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் 2 ஆயிரத்து 691 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment