விமான நிலையத்தில் சிகரெட்டுக்களுடன் சிக்கிய நபர்

316 0
டுபாயிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுகளுடன் சந்தேகநபரொருவரை கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.குறித்த நபர் 4 பயணப்பொதிகளில் சிகரெட் தொகைகளை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்துக்கொண்டுவரும் போதே விமானநிலைய சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டள்ளார்.

4 பயணப் பொதிகளிலிருந்து 32 ஆயிரத்து 400 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அவற்றின் பெறுமதி சுமார் 16 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவென சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாரம்மல பிரதேசத்தைச் சேர்ந்த  36 வயதுடையவரென விமான நிலைய சுங்க பிரிவின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Leave a comment