பாதையை கடக்க முற்பட்ட பெண் பலி

328 0

கடுவலை – பத்தரமுல்ல பிரதான வீதியில் கொஸ்வத்த வைத்தியசாலைக்கு முன்னாள் அமைந்துள்ள மஞ்சள் கடவையில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஞ்சள் கடவையில் பாதையை கடக்க முற்பட்ட பெண்ணை முச்சக்கர வண்டி ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பலத்த காயமடைந்த பெண்ணை கொஸ்வத்த வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

தலங்கம, சூரிய மாவத்தையை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிருழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டியின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment