விற்பனைக்கு தகுதியில்லாத 9 தொன் உரம் மீட்பு

215 0

காலாவதியான திகதி மற்றும் உற்பத்தி செய்த நாட்டின் பெயர் மாற்றப்பட்ட நிலையில் விற்பனை செய்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 9 தொன் உர மூடைகளை நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள்  கம்பஹா, ஹுனுமில்ல பகுதியிலுள்ள களஞ்சியசாலையொன்றிலிருந்து கைப்பற்றியுள்ளனர்.

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இந்த உரத்தை நெதர்லாந்தில் உற்பத்தி செய்துள்ளதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு உற்பத்தி செய்த உரம் 2019 ஆம் ஆண்டுடன் காலாவதியாகிறது. இதனை 2020 ஆம் ஆண்டு காலாவதியாகும் என அச்சிடப்பட்டு உர மூடைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த  நிறுவனத்துக்கு எதிராக மினுவாங்கொட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அதிகார சபை அறிவித்துள்ளது.

Leave a comment