மூதூரில் நபர் ஒருவர் கைது!

321 0

பல வழக்குத் தவணைகளுக்கு நீதிமன்றுக்கு சமூகமளிக்காது தலைமறைவாக இருந்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆலிம் நகர், மூதூர்- 1 பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் திருகோணமலை, மூதூர் பகுதியில் கடைகளை உடைத்து கொள்ளையிட்டமை, வீடுகளில் திருடியமை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு திருகோணமலை மற்றும் மூதூர் நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a comment