வடக்கு மாலியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி

347 0

வடக்கு மாலியில் சந்தேகத்திற்குரிய கிளர்ச்சி குழு நடத்திய தாக்குதலில் டுவாரெக்ஸ் என்ற பழங்குடியின மக்களை சேர்ந்த 40 பேர் பலியாகி உள்ளனர்.

மாலி நாட்டின் சில பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வடக்கு மாலியின் மேனகா பகுதியில் அவர்கள் பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தி உள்ளனர்.

இதுபற்றி அந்த பகுதியின் ஆளுநர் டாவுடா மைகா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, அவகாசா மற்றும் ஆன்டிரன்பவுகேன் ஆகிய கிராமங்களில் கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் 2 முறை தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் டுவாரெக்ஸ் என்ற பழங்குடியின மக்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 40 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Leave a comment