ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படு­கொலை வழக்கு! குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வுக்கு கையூட்­டல்!

219 0

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படு­கொலை வழக்கு விசா­ர­ணை­யின்­ போது, குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வுக்கு கையூட்­டல் வழங்­கப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி எம்.வை.எம். இஸர்­டீன் முன்­னி­லை­யில் இந்த வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது.சந்­தே­க­ந­ப­ரான பிர­தீப் மாஸ்­டர் என்­ற­ழைக்­கப்­ப­டும் எட்­வின் சில்வா கிருஷ்­ணா­னந்­த­ரா­சா­வி­டம் அரச தரப்பு சட்­டத்­த­ரணி மாதவ தென்­ன­கோன் குறுக்கு விசா­ரணை நடத்­தி­னார்.

குற்­றப்­பு­ல­னாய்­வுத் திணைக்­க­ளத்­தின் அதி­காரி ஒரு­வ­ரின் அறி­வு­றுத்­த­லுக்கு அமை­யவே, 2015 ஆம் ஆண்டு ஜன­வரி 4 ஆம் திகதி குற்­றப்­பு­ல­னாய்­வுத் திணைக்­க­ளத்­தி­டம் வாக்­கு­மூ­ல­ம­ளித்­த­தாக சந்­தே­க­ந­ப­ரான பிர­தீப் மாஸ்­டர் கூறி­யுள்­ளார்.

தொப்­பி­கல பயிற்சி முகா­மில் இருந்து பிள்­ளை­யா­னின் வேண்­டு­கோ­ளுக்கு அமைய 10 பேரு­டன் மட்­டக்­க­ளப்­புக்­குச் சென்று அர­சி­யல் கட்சி ஆரம்­பித்­தீர்­களா என்ற அரச தரப்­புச் சட்­டத்­த­ரணி கேள்வி எழுப்­பி­னார்.

இதற்குப் பதி­ல­ளித்த சந்­தே­க­ந­பர், என்ன நடந்­தது என தமக்கு தெரி­யாது என­வும் குற்­றப்­பு­ல­னாய்­வுத் திணைக்­கள அதி­காரி கூறி­ய­தற்­க­மைய விரை­வில் விடு­த­லை­யா­கும் நோக்­கில் அவ்­வாறு வாக்­கு­மூ­ல­ம­ளித்­த­தா­க­வும் கூறி­யுள்­ளார்.

சாந்­தன் என்­ப­வரை தெரி­யுமா என சந்­தே­க­ந­ப­ரி­டம் வின­வப்­பட்­ட­போது, தமக்கு தெரி­யாது என அவர் பதி­ல­ளித்­துள்­ளார். தமிழ் மக்­கள் விடு­த­லைப் புலி­கள் கட்­சி­யி­ன­ரால் காத்­தான்­கு­டி­யில் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட சாந்­த­னைத் தெரி­யுமா என்று அரச தரப்பு சட்­டத்­த­ரணி மீண்­டும் வின­வி­னார்.

அவ­ரைத் தெரி­யாது என்று பதி­ல­ளித்த சந்­தே­க­ந­பர், சாந்­தன் என்ற ஒரு­வர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டதை தாம் அறிந்­தி­ருந்­த­தாக பதி­ல­ளித்­துள்­ளார்.

குற்­றப்­பு­ல­னாய்வு அதி­கா­ரி­கள் தம்­மை­யும் கஜன் மாமா­வை­யும் வேன் ஒன்­றில் கொழும்­பி­லி­ருந்து மட்­டக்­க­ளப்­புக்கு அழைத்து வந்த சந்­தர்ப்­பத்­தில் அவ­ரு­டன் உரை­யா­ட­வில்லை என­வும் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதன்­போது குறுக்­கிட்ட அரச தரப்பு சட்­டத்­த­ரணி, அந்­தக் கருத்து உண்­மைக்கு புறம்­பா­னது என சுட்­டிக்­காட்­டி­னார். 2015 ஆம் ஆண்டு ஒக்­டோ­பர் 4 ஆம் திகதி கைது செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக, 2015 ஆம் ஆண்டு ஜுலை 28 ஆம் திகதி மட்­டக்­க­ளப்­பில் குற்­றப்­பு­ல­னாய்­வுத் திணைக்­கள அதி­காரி நாதன் என்­ப­வ­ருக்கு இரண்டு இலட்­சம் ரூபா இலஞ்­சம் கொடுத்­ததை ஏற்­றுக்­கொள்­கின்­றீர்­களா என சந்­தே­க­ந­ப­ரி­டம் சட்­டத்­த­ரணி வின­வி­னார்.

அதனை மறுத்த சந்­தே­க­ந­பர், அந்த சம்­ப­வத்­திற்­கும் தமக்­கும் தொடர்­பில்லை என்று குறிப்­பிட்­டுள்­ளார்.கைது செய்­யப்­ப­ட­வுள்­ளதை அறிந்து முன்­கூட்­டியே பொலி­ஸா­ரு­டன் கதைத்து 5 இலட்­சம் ரூபா வழங்­கு­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்து முற்­ப­ண­மாக 2 இலட்­சம் ரூபாவை சந்­தே­க­ந­பர் கொடுத்­த­தாக ஏற்­க­னவே வாக்­கு­மூ­லம் அளிக்­கப்­பட்­டி­ருந்­ததை அரச தரப்பு சட்­டத்­த­ரணி நீதி­மன்­றத்­தில் சுட்­டிக்­காட்­டி­னார்.

சந்­தே­க­ந­ப­ரான பிர­தீப் மாஸ்­டர் தாம் செய்த தொழில் தொடர்­பி­லும் மன்­றில் பொய் கூறு­வ­தாக சட்­டத்­த­ரணி ஆதா­ரங்­க­ளு­டன் நீதி­மன்­றத்­தின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­துள்­ளார்.

தொப்­பி­க­ல­யில் வைத்து லெப்­டி­னன்ட் கேர்­ணல் என்ற பதவி வழங்­கப்­பட்­டதா என சந்­தே­க­ந­ப­ரி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­ட­போது இல்லை என அவர் பதி­ல­ளித்­துள்­ளார்.

இது­வும் சந்­தே­க­ந­ப­ரின் பொய் என அரச தரப்பு சட்­டத்­த­ரணி மாதவ தென்­னக்­கோன் குறிப்­பிட்­டுள்­ளார்.வழக்­கின் மூன்­றா­வது சந்­தே­க­ந­ப­ரான கிழக்கு மாகாண சபை­யின் முன்­னாள் முத­ல­மைச்­சர் பிள்­ளை­யான் என்­ற­ழைக்­கப்­ப­டும் சிவ­நே­சத்­துரை சந்­தி­ர­காந்­தன் தொடர்­பில் பிர­தீப் மாஸ்­ட­ரி­டம் விசா­ரணை நடத்­து­வ­தற்கு அவர் சார்­பில் முற்­பட்ட சட்­டத்­த­ரணி நீதி­மன்­றில் ஆட்­சே­பனை தெரி­வித்­தார்.

இந்த வழக்­கின் மேல­திக உண்மை விளம்­பல் விசா­ரணை ஜுன் மாதம் 13 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. சந்­தே­க­ந­ப­ரான பிர­தீப் மாஸ்­ட­ரி­டம் தொடர்ந்­தும் விசா­ரணை நடத்­தப்­ப­டும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

Leave a comment