வவுனியா நகர மத்தியில் இளைஞர்களுக்கிடையே மோதல் நடைபெற்றுள்ளது.
வவுனியா இலுப்பையடியில் அமைந்துள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு அருகே இன்று (26.04) இளைஞர்களுக்கிடையே ஏற்ப்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறி நடு வீதியில் சண்டையிட்டுள்ளனர்.
இச் சம்பவத்தினை நேரில் பார்வையிட்ட பொதுமக்கள் தெரிவிக்கையில்,
கடந்த சில நாட்களான குறித்த இளைஞனுக்கும் மற்றைய தரப்பு இளைஞர்களுக்கிடையே சிறு கருத்து முரண்பாடு காணப்பட்டுள்ளது. இவ் முரண்பாடு காரணமாகவே இன்றைய தினம் 12.00 மணியளவில் வவுனியா நகரில் வைத்து குறித்த இளைஞன் மீது மூன்று இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் சற்று வாகன நெரிசல் ஏற்ப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

