நடுவானில் ஏர் இந்தியா விமான ஜன்னல் உடைந்த விழுந்ததில் 3 பேர் காயம்!

256 0

நடுவானில் ஏர் இந்தியா விமானத்தின் ஜன்னல்கள் ஏர் டர்புலன்ஸ் காரணமாக உடைந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசர்ஸ் நகரில் இருந்து புதுடெல்லி நகரை நோக்கி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787 ரக விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 240 பயணிகள் பயணம் செய்தனர்.
அந்த விமானம் சென்று கொண்டு இருக்கும் போதே, நடுவானில் பெரிய அளவில் சத்தம் கேட்டு இருக்கிறது. இதனால் உள்பக்கம் பெரிய அளவில் பொருட்கள் ஆடி இருக்கிறது. இந்நிலையில், அவ்விமானத்தின் ஜன்னல் பயணிகளின் இருக்கைக்கு மேல் பக்கம் உடைந்து விழுந்து இருக்கிறது. அங்கிருந்த பயணிகளின், தலையில் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. அதே போல் அவசரத்திற்கு கொடுக்கப்படும், ஆக்சிஜன் டியூப்கள் வெளியே வந்துள்ளன.
விமானம் 8000 அடி உயரத்தில் இருந்து, 20,000 அடி தூரத்திற்கு சென்று கொண்டு இருக்கும் போது, ஏற்பட்ட திடீர் காற்று சுழற்சி காரணமாக இந்த சம்பவம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் ஒரு பயணி படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உடனடியாக காயமடைந்த பயணிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
”டர்புலன்ஸ்” எனப்படும் விமானத்திற்கும், காற்றுக்கும் இடையில் இருக்கும் உராய்வு காரணமாக ஏற்படும் பிரச்சனை அதிகமானதை அடுத்து, உட்பக்கத்தில் பாகங்கள் ஆடியது என்று கூறப்படுகிறது. மிகவும் பழைய விமானங்களில் மட்டுமே இப்படி நடக்கும் என்று கூறப்படுகிறது. விமானத்தில் ஏன் இந்த பிரச்சனை ஏற்பட்டது என விசாரணை நடத்த ஏர் இந்தியா நிர்வாகிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a comment