இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மனித செயற்பாடுகள் காரணமாக கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் 18 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை வட மாகாணத்திற்கு பொறுப்பான கால்நடை மருத்துவர் பீ.கிரிதரன் வெளியிட்டுள்ளார்.
குறித்த யானைகள் அதிகளவில் கொல்லப்படுவதற்குக் காரணம் அவை அளவுக்கதிகமாக வேட்டையாடப்பட்டதே என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத மின்சார வேலிகள் அமைத்தும், ஹக்க படஸ் பாவித்துமே யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளின் காரணமாக காட்டு யானைகள் மட்டுமின்றி ஏனைய வனவிலங்குகளும் கொல்லப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

