மரணதண்டனை பெற்றுள்ள துமிந்த சில்வா வெளிக்கடை சிறையிலிருந்து போகம்பறைக்கு மாற்றப்படவுள்ளார்.

293 0

r-dumindaமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை வழக்கில் குற்றவாளிகளான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெளிக்கடை சிறைச்சாலையில் இருந்து கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு இடமாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வழக்கின் மற்றுமொரு குற்றவாளியான தெமட்டகொட சமிந்தவையும் போகம்பறை சிறைச்சாலைக்கு இடமாற்ற சிறைச்சாலையின் உயர் அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே மரண தண்டனைப் பெற்ற பாதாள உலக குழுவினர் குறித்த சிறைச்சாலையில் இருப்பதால் அவர்களால் துமிந்த சில்வாவுக்கும்,சமிந்தவின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அச்சத்தினால் இவர்கள் இடமாற்றப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மரணதண்டனைக் கைதிகளான துமிந்தவும்,அவரது நண்பரையும் வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும்,ஆணையாளருமான துசார உபுல்தெனிய தொிவித்துள்ளார்.

இதேவேளை விசேட பாதுகாப்புகளின் கீழ் துமிந்த சில்வாவை வெளிக்கடை சிறைச்சாலையின் சீ-3ஆம் இலக்க அறையில் தடுத்து வைக்கவுள்ளதாகவும்,குறித்த அறையானது போதைப்பொருள் மன்னன் வெலே சுதா உள்ளிட்ட பல மோசமான  குற்றவாளிகள் தங்க வைக்கப்பட்டிருக்கும் அறை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.