தெல்லிப்பளை வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

367 0

யாழ்ப்பணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் குழந்தை வைத்திய நிபுணரை நியமிக்கக்கோரி, தாய்மார்கள் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தியுள்ளனர்.

தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு குழந்தை வைத்திய நிபுணரை நியமிக்குமாறு கோரி, உடுவில் தெல்லிப்பளை பிரதேசத்திற்கு உட்பட்ட தாய்மார்கள் வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வைத்தியசாலையில் கடமையாற்றிய குழந்தை வைத்திய நிபுணர் மேற்படிப்பிற்கு சென்றதையடுத்து, கடந்த ஒருவருடமாக குழந்தை வைத்தியர் இல்லாமல் வைத்தியசாலை இயங்கி வருவதாக தெரிவிக்கும் குறித்த பிரதேசத்திற்குட்பட்ட தாய்மார்கள், மாதாந்த கணிப்பீடுகள், பேசாக்கு வழங்கல் போன்றவற்றில் கஸ்டநிலைமையை எதிர்நோக்குவதாகவும், இதன்காரணமாக வைத்தியர் ஒருவரை நியமிக்கவேண்டும் எனவும் கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

Leave a comment