தமிழகத்தில் லோக் ஆயுக்தா – சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு கமல்ஹாசன் நன்றி

240 0

தமிழகத்தில் லோக் ஆயுக்தா கோர்ட்டுகளை விரைவில் அமைக்க வேண்டும் என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் லோக்பால் சட்டம் 2013-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள் அமைக்கவில்லை. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் ‘லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். லோக் ஆயுக்தா அமைக்கும் நடவடிக்கை குறித்து ஜூலை 10-ம் தேதிக்குள் தமிழக தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’ என்றும் சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா கோர்ட் அமைக்க உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்  நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, உச்ச நீதிமன்றத்திற்குத் தமிழ்நாட்டில் உள்ள நேர்மையாளர்களின் மனமார்ந்த நன்றி. இந்த அரசு, உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்று செயல்பட மக்கள் வலியுறுத்த வேண்டும். லோக் ஆயுக்தா, ஊழல் அரசியல்  பிணியைத் தீர்க்கும் மருந்து என தெரிவித்துள்ளார்.

Leave a comment