மீள் குடி­யேற்­றத்­துக்கு தடை­யாக இரா­ணுவ முகாம்கள்

303 0

யாழ்ப்­பாணம் வலி. வடக்கில் மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்ட காணி­களில் மக்­க­ளது  மீள் குடி­யேற்­றத்­திற்கு இடை­யூ­றான வகை யில் மூன்று இரா­ணுவ முகாம்கள் காணப்­ப­டு­வ­தாக  மீள்­கு­டி­யேறும் மக்கள் தெரி­வித்­துள்­ளனர்.

குறித்த இரா­ணுவ முகாம்கள் காணப்­ப­டு­வ­தா­னது தமது மீள் குடி­யேற்­றத்­தினை மேற்­கொள்­வதில் பெரும் சிரம்­மா­க­வுள்­ள­தாக மீள் குடி­யே­றிய மக்­களும் விசனம் தெரி­வித்­துள்­ளனர்.

கடந்த 13ஆம் திகதி சித்­திரை புத்­தாண்டு தினத்­தன்று வலி வடக்கில் 683 ஏக்கர் காணிகள்  பொது மக்­க­ளிடம் மீள கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்­நி­லையில்   விடு­விக்­கப்­பட்ட காணி­க­ளிலே அம் மக்கள் மீளக் குடி­யேற்­றங்­களை மேற்­கொள்­வதில் இம் மூன்று இரா­ணுவ முகாங்­களும் இடை­யூ­றாக இருப்­ப­தாக பொது மக்­களால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக மாவிட்­ட­புரம் கட்­டுவன் மயி­லிட்டி வீதி­யினை இணைக்கும் பிர­தான பாதையில் வீதியின் நடுவில் 40 ஏக்கர் பரப்பில் ஒரு இரா­ணுவ முகாமும், அதே­போன்று கட்­டுவன் மயி­லிட்டி வீதியில் 7 கிலோ மீற்றர் நீள­மான பாதை­யிலும், ஜே.240 கிராம சேவகர் பிரிவின் தென்­ம­யிலை பகு­தி­யி­லு­மாக  மூன்று இரா­ணுவ முகாம்­களும் காணப்­ப­டு­கின்­றன.

இந்­நி­லை­யி­லேயே இந்த  இரா­ணுவ முகாங்கள் காணப்­ப­டு­வ­தானால் விடு­விக்­கப்­பட்ட காணி­க­ளுக்­குள்ளும் மக்கள்   செல்­வ­தற்­கான பாதைகள் துண்­டிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சில இடங்­களில் வேறொ­ரு­வ­ரது காணி­க­ளி­னூ­டா­கவே செல்ல வேண்டி இருப்­ப­தா­கவும் பொது­மக்கள் தெரி­வித்­துள்­ளனர்.

எனவே மேற்­படி மூன்று இராணுவ முகாம்களும் விரைவாக விடுவிக்கப்பட்டாலேயே மக்களிடம் கையளிக்கப்பட்ட காணிகளில் மக்கள் விரைவாக மீளக் குடியேற முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a comment