யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலத்தில் தேசிய புதுவருட நிகழ்வு (காணொளி)

296 0

தேசிய சகவாழ்வு அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலத்தில் தேசிய புதுவருட நிகழ்வு இன்றுநடைபெற்றது.

தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இவ்வருடத்திற்கான புதுவருட நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றன.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கலந்து கொண்டார்.

யாழ்;ப்பாணம் கனரத்தினம் மாகாவித்தியாலத்தில் இருந்து கலாசார ரீதியாக விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் நடைபெற்றது.

தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடசாலை சீருடைத் துணிகள் அமைச்சர் மனோ கணேசனால் வழங்கி வைக்கப்பட்டன.

இதனையடுத்து தேசிய புதுவருட நிகழ்வினையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட புதுவருட விளையாட்டு நிகழ்வுகளை அமைச்சர் மனோ கணேசன் ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றிபெற்வர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

தேசிய புதுவருட நிகழ்வில் வடக்கு மாகாண பிரதி முதல்வர் கந்தையா சர்வேஸ்வரன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சிறி பாஸ்கரா, யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயன், கனகரத்தின் மகா வித்தியாலய அதிபர், வடக்கு மாகாண கல்வி அதிகாரிகள், யாழ்;ப்பாணம் மாவட்ட பாடசாலைகளின் ஆசரியர்கள், மாணவர்கள், தேசிய சகவாழ்வு அமைச்சின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment