மன்னார் பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரை பகுதியில் மோட்டார் குண்டுகள்

4 0

மன்னார் பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரை பகுதியில் பருவகால மீன்பிடித் தொழிலை வங்காலை மற்றும் தாழ்வுபாடு மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தாழ்வுபாடு மீனவர்கள் குறித்த பகுதியில் வாடி அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் மீனவர் ஒருவர் கடந்த 13 ஆம் திகதி காலை குறித்த கடற்கரை பகுதியில் குழி தோண்டியுள்ளார்.

இதன்போது இரும்பு பெட்டியொன்று அங்கிருப்பதை அவதானித்த அவர் அருகிலுள்ள கடற்படையினரிடம் இது தொடர்பில் அறிவித்து பின் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சென்று பார்வையிட்ட போது மோட்டார் குண்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் பொலிசார் பாதுகாப்பு வழங்கியுள்ளதுடன் நேற்று மதியம் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.

இதன்போது குறித்த குழியில் இருந்து 81 ரக மோட்டார் குண்டுகள் 15 மற்றும் 61 ரக மோட்டார் குண்டு என்பன மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட குண்டுகள் பேசாலை பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் வைத்து செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

Related Post

வடக்கு மாகாணத்தில் ஐந்து சுகாதாரத்துறைக்கான ஐந்து கட்டடங்களை மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன திறந்து வைத்தார்(காணொளி)

Posted by - September 25, 2017 0
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்குரிய புனரமைக்கப்பட்ட வெளிநோயாளர்த் தொகுதி கட்டடம், ஊர்காவற்றுறை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பகுதி கட்டிடம் மற்றும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச சுகாதார வைத்திய…

யாழ்ப்பாணத்தில் கனமழை: 125 பேர் முகாம்களில் தஞ்சம்!

Posted by - November 7, 2017 0
அவர்களுக்கான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர், பிரதீப் கொடிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த 125 பேரில், சுமார் 70 பேர்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எதிர்ப்பு நடவடிக்கையின் எதிரொலி: இலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்!!

Posted by - May 25, 2018 0
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூறியமைக்காக இடைநிறுத்தப்பட்ட வங்கி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கிளிநொச்சி ஹற்றன் நஷனல்…

மொறவௌ பகுதியில் பதற்றம்

Posted by - July 20, 2017 0
திருகோணமலை – மொறவௌ பகுதியில் உள்ள மிரிஸ்வெல பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியை சுவீகரிக்க முற்பட்ட நிலையில் பிரதேசத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. யுத்தத்துக்கு முன்னர் இடம்பெயர்ந்து…

கிறிஸ்தவர்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த உயிர்த்த ஞாயிறு (காணொளி)

Posted by - April 16, 2017 0
சிலுவையில் அறையப்பட்டு மரணித்த இயேசுபிரான் உயிர்த்த தினம் இன்றாகும். உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு விசேட ஆராதனையும் இயேசுபிரானின் உயிர்ப்பு ஆராதனையும்…

Leave a comment

Your email address will not be published.